R.Maheshwary / 2022 ஏப்ரல் 12 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
சமையல் எரிவாய சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்த, விற்பனை முகவர் ஒருவர் கடமைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்த டிக்கோயா பகுதியைச் சேர்ந்த முகவர் ஒருவரே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முகவர் நிலையத்துக்கு நேற்றைய தினம்(11) 12.5 கிலோகிராம் நிறையுடைய 80 சிலிண்டர்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்ததுடன், அதனை அவர் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் அதிகபட்ச விலையாக லிட்ரோ நிறுவனத்தால் 1,761 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முகவர் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்தே, அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை லிட்ரோ நிறுவனத்தின் ஆலோசனைகளை தான் பின்பற்றப் போவதில்லை என்றும் தனது வர்த்தக நிலையத்துக்கு விநியோகிக்கும் சிலிண்டரை தனக்கு தேவையான விலைக்கு விற்கும் உரிமை தனக்கு உள்ளதென டிக்கோயா- தரவளைப் பகுதியிலுள்ள சமையல் எரிவாயு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026