2025 மே 19, திங்கட்கிழமை

அதிருப்தியை வெளிப்படுத்த பெருந்தோட்டத்துறை அமைச்சருடன் சந்திப்பு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற  நிர்வாகம் தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்   அவசர  சந்திப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் (7)  பெருந்தோட்டக் கைத்தொழில்  அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது.பெருந்தோட்ட பகுதிகளில்  JEDB  நிர்வாகத்தினால் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு  வழங்கப்பட்ட காணிகள், மீள  பெற்றுக்கொள்ள நிர்வாகம் நடவடிக்கை  எடுத்தமையினால் குடியிருந்த மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

 இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இந்த நிலைமையை சீர் செய்ய அமைச்சரால் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை  விஸ்தரித்தால் அல்லது மலசலகூடங்கள் அமைத்தாலோ உடனடியாக வழக்கு தொடரப்படுவது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில், தொடர்ந்தும் இத்தகைய செயற்பாடுகள் நடைபெறாது என  அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார் ,சுஜித் சஞ்சய பெரேரா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X