2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவராக வேலுகுமார் தெரிவு

Sudharshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம் 

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பன்வில பிரதேச செயலக பிரிவு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவராக ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவினால் தெரிவு செய்யபட்டுள்ளார்.

சனிக்கிழமை  (18) நடைபெற்ற பன்வில பிரதேச செயலக பிரிவுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் வேலுகுமார் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,

'கடந்த  2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07ஆம் திகதி அரச வர்த்தமானியில், பன்வில பிரதேச செயலக பிரிவு இரு மொழி  பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்ந செயலகம் இரு மொழிகளிலும் மக்களுக்கு தேவையான சேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

தனி நபர் ஒருவர் தான் எந்த மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த மொழியில் தனது சேவையை பெற்றுக்கொள்ள உரித்துடையவர். இந்த பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் 60 வீதமானோர் தழிழ்மொழி பேசுபவர்கள். எனவே, இரு மொழி கொள்கை இங்கு கடைபிடிக்கப்படல் வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .