Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை, மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க, சகல உறுப்பினர்களும் அரசியல், தொழிற்சங்க பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கே. குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று செவ்வாய்க்கிழமை, பொகவந்தலாவ டின்சின் நகர கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'எமது நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தற்காக, அரசாங்கம் தேசிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டு வந்தாலும், நாட்டின் நலன் கருதிய வேலைத் திட்டத்துக்கு, நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்' என்றார்.
'மேலும், அரசாங்கம் நாட்கூலிக்கு வேலை செய்கின்றவர்கள், குறைந்த வருமானம் பெறுவோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் முதலானோருக்கு உதவும் வகையில் பிரதேச செயலகங்கள், சமுர்த்தி வங்கிகள் ஊடாக விவரங்களை திரட்டி வருகின்றது. இவ்வாறு விபரங்கள் திரட்டும் போது அரசியல், தொழிற்சங்க பேதங்களை மறந்து சகல உறுப்பினர்களும் மக்களின் நலன் கருதி ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்' என்றார்.
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட 12 வட்டாரங்களிலும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவரங்களை திரட்டும் போது அந்தந்த வட்டார உறுப்பினர்கள் அவர்களோடு இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
உரிய நேரத்தில் தகுந்த விவரங்கள் தரப்படா விட்டால், அதன் ஊடாகப் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்கள் தான் என்பதை உணர்ந்து தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்' என்றார்.
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago