Kogilavani / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினரான சுரேஸ் குமார், அச்சங்கத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஆரம்பத்திலிருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தையும் தொழிலாளர் தேசிய முன்னணியையும் இப்போது காண முடியவில்லை என்றும் தனது அற்பச் சலுகைகளுக்காக கட்சியையும் தொழிற்சங்கத்தையும் அடமானம் வைக்கும் அரசியல் நாகரீகமற்ற தலைமையுடன் இனியும் பயணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய முன்னணி, பிரதேசசபை உறுப்பினர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கவில்லை என்றும் தன்னைப் போன்று பழிவாங்களுக்கு உட்பட்டுள்ள இன்னும் பல உறுப்பினர்கள் வெளியேறுவதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் தொழிலாளர் தேசிய முன்னணியினதும் நிர்வாகசபை அங்கத்தவர் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் தான் விலகியுள்ளதாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
5 minute ago
16 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
46 minute ago