2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

அரவிந்தகுமார் எம்.பி. பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

Kogilavani   / 2017 மார்ச் 29 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அ.அரவிந்தகுமார், நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 2 ஆம் திகதி, பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

'சிறுவர் உரிமையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தடையற்ற செயற்பாடுகளும்' என்ற  தொனிப்பொருளிலான மாநாடு, பங்களாதேஷின், டாக்கா சமூக மண்டபத்தில், எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து 4 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

சிறுவர்களுக்கான உலகளாவிய அமைப்பின் அனுசரணையுடன நடைபெறவுள்ள இம்மாநாட்டில், 130 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு,  சிறுவர்களுக்கான  உரிமை குறித்த நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் கைலாஷ் சத்தியாஸ்திரி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், இலங்கையை பிரதிநிதியாக அரவிந்தகுமார் எம்.பி கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X