செ.தி.பெருமாள் / 2019 ஜனவரி 31 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலை அடிவாரத்திலுள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அஷ்டபந்தன மஹா குடமுழுக்கு விழா, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
6ஆம் திகதி காலை 9 மணிக்கு, விநாயகர் வழிபாடு குடமுழுக்கு கரகம் ஆரம்பமாகி, மாலை 5 மணிக்கு, கணபதி பூஜை புண்ணியகயந்திர பூஜை நடைபெறவுள்ளது. 7ஆம் திகதி, காலை 8.30 மணிக்கு, ராஜ கணபதி ஆராதனையைத் தொடர்ந்து, கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வரல், மாலை 5 மணிக்கு பிரதான கும்ப கடஸ்தாபன திருமுறை பாராயணம் இடம்பெறவுள்ளதோடு, 08ஆம் திகதி, காலை 9.00 மணிக்கு, கணபதி பூஜை, கும்ப பூஜையைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு, புண்ணிய விமர்சனம் வேத திருமுறை பாராயணம் விபூதி பிரசாதம் வழங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அதையடுத்து 9ஆம் திகதி காலை 9.00 மணிக்கு, விநாயகர் வழிபாட்டுடன், காலை 10 மணி முதல் இரவு 7.00 மணிவரை, எண்ணெய் காப்பு சாத்துதல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இறுதிநாளான 10ஆம் திகதி காலை 8.30 மணிக்கு, கணபதி பூஜை மந்திர யாகசாலையுடனான பூஜைகளும் 11.00 மணிக்கு ஸ்தூபி அபிஷேகம் இடம்பெற்று, 11.15 மணிக்கு மஹா குடமுழுக்கு அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் இடம்பெறவுள்ளன.
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago