Sudharshini / 2016 மார்ச் 01 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.
பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளில், ஆசிரியர் உதவியாளர்களாக கடமை புரிபவர்ளுடனான சந்திப்பு, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பதுளை பணிமனையில்; ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.சாலோபராஜா உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர், '3021 ஆசிரியர் உதவியாளர் நியமனங்களில், 2129 பேருக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 892 பேருக்கு இன்னமும் நியமனங்கள்; வழங்கப்படவில்லை. 200 ஆசிரியர் உதவியாளர்கள், 6,000 ரூபாய் சம்பளம் போதாதென கூறி, விலகிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது' என்றார்.
'ஆசிரியர் உதவியாளர்களுக்கான 6,000 ரூபாய் சம்பளம், எவ்வகையிலும்; போதுமானதல்ல. சாதாரண தொழிலாளியொருவருக்கு தினக் கூலியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்நிலையில், ஆசிரியர் உதவியாளர்களுக்கு நாளொன்றுக்கு இருநூற்றி ஐம்பது ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஆசிரியர் உதவியாளர் என்ற கௌரவம் மட்டுமே அவர்களுக்கு உள்ளதேயன்றி, பொருளாதார நிலையில் அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
நல்லாட்சியில், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது பேர், நாடாளுமன்றத்தில் உள்ளனர்;. இவர்கள் சமூக ரீதியில் ஒன்றிணைந்து, ஆசிரியர் உதவியாளர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்;கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும்' என்றும் அவர் கூறினார்.
'ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கும் அதேவேளை, அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சம்பள விடயத்தைப் பற்றியும் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
ஆளும்கட்சி சார்பான எமது பிரதிநிதிகள், ஆசிரியர் உதவியாளர் விடயத்தில் கவனம் செலுத்தி, சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். தவறின், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் ஊடாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண ஆலோசித்துள்ளோம்' என்று அவர் மேலும் கூறினார்.
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago