2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Sudharshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, ஸ்ரீ சுமங்கல மாவத்தையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் இருந்து, 50 வயதுடைய ஆணொருவரின் சடலமொன்றை இன்று  திங்கட்கிழமை (15) மீட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நாகூர் லெப்பே மொஹமட் ஹனஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவர்,  இரண்டு வருடங்களுக்கு முன்னர்,  இப்பிரதேசத்துக்கு வந்ததாகவும்  சிறு சிறு வேலைகளைச் செய்து தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .