2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்துக்குட்பட்ட அலவத்துகொடை சரத் ஏக்கநாயக்க மாதிரி ஆரம்ப பாடசாலையின்  முன்பாக பெற்றோர்கள் நேற்று  (19)  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் அதிபர் ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க ஓய்வு பெற்ற பின்,  பதில் அதிபராக இப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றி வந்தவரை நியமிக்காது, வேறு ஓர் ஆசிரியரை அவ்விடத்துக்கு நியமிக்கப்பட்டமையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிதாக பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளவரை நீக்கிவிட்டு, பிரதி அதிபரை பதில் அதிபராக நியமிக்கும் வரை தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போதவாக பெற்றோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பாடசாலையின் பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.சேனாரத்ன தெரிவிக்கையில், 'முன்னாள் அதிபர் ஓய்வு பெற்ற பின் அதிபரின் கடமைகளை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை. எனவே, புதிதாக அதிபர் ஒருவரை நியமிக்கும் வரை தற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன்' என தெரிவித்தார்.

 கட்டுகஸ்தோட்டை வலய கல்விப் பணிப்பாளர்  திருமதி வை.பீ.கே, யாப்பாரத்ன தெரிவிக்கையில், 'அலவத்துகொடை ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்ற பின் எழுந்துள்ள நிலைமை குறித்து மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளோம். இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .