Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹொமட் ஆஸிக், ரவிந்திர விராஜ் அபயசிறி
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக, ஆறு மாட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசியக் கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எச்.ஏ.ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
காலி, மாத்தளை, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதற்கமைவாக காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச செயலக பிரிவும் கேகாலை மாவட்டம் முழுவதும் முக்கியமாக தெரணியகலை, கேகாலை, யட்டியந்தோட்டை, வரக்காபொல, ஆகிய பிரதேச செயலக பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் கிரிஎல்ல, அயகம, பலாங்கொடை மற்றும் முழு மாவட்டமும் மாத்தறை மாவட்டத்தில் கொடபொல பிரதேச செயலகப் பிரிவும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, தொடர் மழை காரணமாக மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மண்சரிவு அபாயம் அதிகம் நிலவும் வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மாத்தளை மாவட்ட அதிகாரி சி.யூ.பீமோரேமத அறிவித்துள்ளார். இதற்கமைவாக, மாத்தளை, யடவத்த, உக்குவெல மற்றும் இறத்தோட்டை ஆகிய பிரதேசங்கள் அதிக அபாயமிக்க பிரதேசங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் மண்மேடு சரிந்து விழுதல், மரங்கள் முறிதல் என்பன நடைபெறலாம் என்பதால் அதுகுறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தளை தொடம்தெனியவில் நீடிக்கும் அபாயம் காரணமாக அதனை கண்டறியும்பொருட்டு மழைமானி வைக்கப்பட்டுள்ளதாக மேற்படி நிலையம் மேலும் கூறியுள்ளது.
பல்லேபொல, வில்கமுவ மற்றும் தம்புள்ளைக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025