2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஆலயம், பாடசாலை உடைக்கப்பட்டு கொள்ளை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.சந்ரு, எஸ்.கணேசன்

நானுஓயா, டெஸ்போட் தோட்டத்திலுள்ள எபொட்ஸ்போட் பாடசாலை,  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் டெஸ்போட் சிறுவர் பராமரிப்பு நிலையம் என்பன, இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதுடன்,  அங்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதென, நானுஓயா பொலிஸில், இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து எந்தவொரு பொருட்களும் எடுத்துசெல்லப்படவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும்,  சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வாயு அடுப்பு,வாயு சிலிண்டர் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதென, தோட்ட நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளனர்.

மற்றும் பாடசாலையில் பாதுகாப்பாக வைத்திருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்டுக் கிடந்ததாகவும் இத்துடன் நான்காவது முறையாக பாடசாலை உடைக்கப்பட்டுள்ளதெனவும் தோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .