Kogilavani / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலையின் தரம் 10, 11 மாணவர்களுக்கான ஆளுமை விருத்திச் செயலமர்வு, பாடசாலையின் அதிபர் பெ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் துரை மனோகரன், 'பெருவிரல்' இலக்கிய அமைப்பின் உறுப்பினர்களான சுதர்ம மகாராஜன், வி.எம்.ரமேஷ், ஆசிரியர் த.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கண்டி விவேகானந்தா பாடசாலையைச் சேர்ந்த நாடகப் பிரிவு மாணவர்களும் இந்தச் செயலமர்வில் பங்கேற்றனர்.
இதன்போது அரங்கச் செயற்பாடுகளுடன் கூடிய ஆற்றுகைகளும் கிரகித்தல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தல் தொடர்பிலும், வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதனூடாக எதிர்காலத்தை எதிர்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago