2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

இ.தொ.கா.வை கட்டிக்காத்த பெருமை உத்தியோகஸ்தர்களுக்கும் உண்டு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது தொழிற்சங்கத்தில் பணிப்புரியும் உத்தியோகஸ்தர்களும் எதிர்காலத்தில் தலைவராகலாம். அதற்கு இ.தொ.கா ஒருபோதும் தங்குதடையாக இருக்காது என இ.தொ.கா.வின் தொழிலுறவு இயக்குநர் எஸ்.ஜோதிக்கண்ணன் தெரிவித்தார்.

கொழும்பு சௌமிய பவனில் நடைபெற்ற முழுநேர உத்தியோகஸ்தர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கட்டிக்காத்த பெருமை தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அதில் பணிப்புரியும் உத்தியோகஸ்தர்களுக்கும் உண்டு.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலந்தொட்டு எமது சகோதர உத்தியோகஸ்தர்கள் இ.தொ.கா.வின் பாசறையில் வளர்ந்தவர்கள். அமரர் தொண்டமானின் கொள்கைகளை மிகவும் இறுக்கமாக பற்றிக் கொண்டவர்கள். மக்களுக்காக சேவையாற்றுவதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது. ஒரு சமூக செயற்பாட்டாளராக தம்மை இனங்காட்டிக் கொண்டவர்கள். எவருக்கும் விலை போகாதவர்களாக தம்மை சமூகப்பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களே எமது உத்தியோகஸ்த்தர்கள்.

சமூகத்தில் ஒரு சிலர் கட்சிக்காக தலைவர்களாக உதயமாகி உள்ளனர்.
இன்னொரு விதமாக மாற்றுக் கட்சிகளுக்கு விலைபோன தலைவர்கள் என்றெல்லாம் சமூகத்தில் தங்களை அடையாளப்படுத்தி;க் கொண்டிருக்கின்றார்கள். இந்த வரிசையில் எம்மைப் பொறுத்த மட்டில் தொழிற்சங்கத்திற்கோ, கட்சிக்கோ விலை போகாதவர்கள் என்ற பெருமை இ.தொ.கா.வின் தொழிற்சங்கத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கே உண்டு.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்த வரை பதவியாளர்களுக்கு மட்டுமே பதவி வழங்குவது அல்ல. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் தலைவராகும் வாய்ப்பு இருக்கின்றது. 50 வருடங்களுக்கு மேலாக தொழிற்சங்கப் பணியையே தமது தொழிலாகக் கொண்டு சேவையாற்றி வருவது பாராட்டுக்குரிய விடயமாகுமென அவர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .