Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.சதிஸ் / 2019 மார்ச் 18 , மு.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை நகரில் பொறுத்தப்பட்டிருந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நான்கு பெயர்ப்பலகைகளுக்கு, சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என, பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் ரவி குழந்தைவேலு, பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் நேற்று (17)முறைப்பாடு செய்துள்ளார்.
ஓட்டோவில், சிலர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளமை, பொகவந்தலாவ நகரில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.ரீ.வி கமெராக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் நேற்று அதிகாலை 12.45 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் ஆறுமுகம் தொண்டமானினதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் உருவப்படம் அடங்கிய பெயர்ப்பலகையும், தானும் கட்சித் தலைவரும் இருந்த மற்றுமொரு பெயர்ப்பலகையுமே, இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறு பெயர்ப்பலகைகளைச் சேதப்படுத்தியுள்ள சந்தேகநபர்கள், பொகவந்தலாவை நகரிலுள்ள சி.சி.ரீ.வி கமெராக்களை, துணியொன்றால் மூடிவைத்துள்ளமையும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
42 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago