2026 ஜனவரி 21, புதன்கிழமை

’இனவாதத்தை முதன்மைப்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது’

Kogilavani   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இனவாதத்தை முதன்மைப்படுத்தி நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுச்செல்ல முடியாது என்று தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, பெருந்தோட்ட மலையக மாணவர்கள் ஏனைய மாணவர்களைப்போல் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குருவிட்ட கீரைகலை தமிழ் வித்தியாலயத்தில், சப்ரகமுவ மாகாணசபையின் நிதியொதிக்கீட்டில் 63 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக் கட்டடத்தின் மேல் மாடியை, வைபவ ரீதியாக திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் ஜே.டேமியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்துரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், பெருந்தோட்ட மாணவர்களுக்கு கல்வித் துறையில் சமவாய்ப்பு, சமஅந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்பதற்காக, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அரசாங்கமும் சபர்கமுவ மாகாணசபையும், மலையக தோட்ட மாணவர்களின் நலன்கருதி தமது கடமைகளை முறையாகவும் சரியாகவும் செய்து வருகின்றன என்றும் அதேபோல் அதிபர்களும் ஆசிரியர்களும் தமது கடமைகளை முறையாக செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“அப்போதுதான மலையக மாணவர்கள் தமது கல்வியில் முன்னனேற முடியும்” என்றும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X