2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Sudharshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையையடுத்து நுவரெலியா மாவட்டம்  மற்றும் பதுளை மாவட்டத்திலுள்ள சில பகுதிகளுக்கு மண்சரி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதென தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எச்.ஏ.ஜீ.ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களுக்கும் பதுனை மாவட்டத்தில் பதுளை, பசரை, எல்ல, ஹாலிஎல, ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட சில பிரசேதங்களுக்கும் இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசங்களில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .