R.Maheshwary / 2023 ஜனவரி 29 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
பல்வேறு போதை பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தந்த 34 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கடந்த 27, 28ஆம் திகதிகளில் பல்வேறு போதைப் பொருட்களுடன் வருகைத் தந்த 34 இளைஞர்களே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் வருகைத் தரும் வாகனங்கள் வீதி சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்ட போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Mar 2026