2026 ஜனவரி 21, புதன்கிழமை

இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டது நுவரெலியா

Niroshini   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரதேசத்தை முடக்குவதா இல்லையா என்ற இரண்டும் கெட்டான் நிலைக்கு நுவரெலியா சென்றுள்ளது.

நுவரெலியாவில், நாளுக்கு நாள் கொரோனா அச்சம் நீடித்து வருவதுடன், தொற்றாளர்களும் அதிகரித்து வருகின்றதை, பொது சுகாதாரப் பிரிவினர் உறுதி செய்து வருகின்றனர்.

தற்போது, நுவரெலியாவில், வசந்த கால நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து பலர் வந்து சென்றனர்.

இவ்வாறு வந்துசென்ற வௌமாவட்டத்தோர் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக, நுவரெலியா மாவட்டப்  பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்,  நுவரெலியா நகரில் இடம்பெறுகின்ற வசந்தகால நிகழ்வுகளுக்கு, வெளிமாவட்டங்களில் இருந்து வருகைத் தருவோருக்கு, பயணத்தடை அறிவிக்கப்பட்ட போதிலும், அந்தக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகவும், பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நுவரெலியாவின் கந்தேஎல்லை, ஹக்கலை, மாகாஸ்தொட்ட ஆகிய பிரதேசங்களில் உள்ள பலருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இப்பரிசோதனை முடிவு கிடைக்கப்பெற்றதன் பின்னரே, நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க முடியுமெனவும், நுவரெலியா மாவட்டப் பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நுவரெலியாவில் இடம்பெற்று வருகின்ற வசந்தகால நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா முடக்கப்படுமா, இல்லையா என்ற இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X