Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் தோண்டிய ஆறு சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் நகரிலிருந்து காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாயில் இரத்தினக்கல் அகழ்ந்துகொண்டிருந்த அறுவரே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இரத்தினக்கல் அகழ்வதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
டிக்கோயா- வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள டிக்கோயா கால்வாயில் சிலர் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வதாக கிடைத்த தகவலையடுத்து ஹட்டன் பொலிஸார் சுற்றிவளைப்பு நடத்தி சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்தினபுரி, கஹவத்தை, பலாங்கொடை, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25-40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 minute ago
26 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
42 minute ago