2026 ஜனவரி 21, புதன்கிழமை

இரத்தினக்கல் அகழ்வுக்காக ஆறுகள் ஏல விற்பனை

Kogilavani   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினக்கல் அகழ்வுக்காக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள களுகங்கை, வேகங்கை ஹங்கமுவ கங்கை ஆகிய ஆறுகள், ஏல விற்பனை செய்யப்படவுள்ளன என்று, இரத்தினக்கல் அதிகார சபை தலைவர் திலக் வீரசிங்க நேற்று (5) தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம்,  நிவித்திகல பிரதேச இணைப்புக் குழு கூட்டம் ஆகியவற்றின் தீர்மானத்துக்கு இணங்க, மேற்படி ஏல விற்பனை வெளிப்படைத் தன்மையுடையதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியோடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை களுகங்கை வேகங்கை ஆகிய ஆறுகளின் சில பகுதிகள், தற்போது ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X