2026 மே 14, வியாழக்கிழமை

dd

இரத்தினக்கல் பரிசோதனை பஸ் சேவை நிறுத்தம்

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி பிரதேச இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு நடமாடும் இரத்தினக்கல் பரிசோதனை நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ் சேவை, தற்போது கவனிப்பாற்று இருப்பதால், பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் வர்த்தகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி அதிகாரசபையின் இரத்தினபுரி காரியாலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த பஸ்ஸில், தற்போது இரத்தினக்கல் பரிசோதனை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறுவதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பல மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த பஸ்ஸில், இரத்தினக்கல் பரிசோதனைக்கான அனைத்து நவீன இயந்திரங்களும் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் இரத்தினக்கல் அதிகாரசபைக்கு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய இந்த நடமாடும் பஸ், எந்தவித பயன்பாடுகளும் இன்றி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக, இரத்தினக்கல் அதிகாரசபையின் இரத்தினபுரி காரியாலய அதிகாரிகளிடம் வினவியபோது, இரத்தினக்கல் பரிசோதனை நடவடிக்கைகளுக்கான உத்தியோகத்தர்கள், கொழும்பு பிரதான காரியாலயத்தில் இருந்தே நியமிக்கப்படுவதால், நடைமுறைச் சிக்கல் காணப்படுவதாகவும் இதனாலேயே, நடமாடும் பரிசோதனை நிலைய பஸ், இரத்தினக்கர் கண்காட்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .