Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 31 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி பிரதேசத்தில், கடத்தப்பட்ட பெண் தொடர்பில், தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கடந்த 27ஆம் திகதி காலை 7.30 மணியளவில் குறித்தப் பெண் கடத்தப்பட்டுள்ளார்.
34 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இவரது கணவர் இரத்தினக்கல் வர்த்தகர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தினத்தன்று, குறித்த பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகள் மாத்திரம் வீட்டில் தனிமையில் இருந்த போது, இனந்தெரியாத நபரொருவர் அவரை அச்சுறுத்தி, முச்சக்கர வண்டியொன்றில் கடத்தி சென்றுள்ளார்.
இது தொடர்பான காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, குறித்தப் பெண்ணின் சிறிய மகன் வழங்கிய முச்சக்கர வண்டி இலக்கத்தை வைத்து முன்னெடுத்த விசாரணைகளின் ஊடாக, முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்ட போதிலும், கடத்தப்பட்ட பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
இச்சம்பவம் தொடர்பில், அப்பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் ஆணொருவருக்கு தொடர்பிருப்பதாக, தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
தனது மனைவி கடத்தப்பட்டு 4 தினங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என, குறித்தப் பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .