Kogilavani / 2021 மே 04 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
இரத்தினபுரி மாவட்டத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, மாவட்டத்திலுள்ள பிரதான ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக, நீர்ப்பாசனத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலுகங்கையின் நீர்மட்டம் 5மீற்றர் வரை உயர்வடைந்துள்ளதாகவும், வேகங்கை, நிரிஎல்ல கங்க, தெனவக்க கங்க, குருகங்க, ஹங்கமு கங்கைளின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே இம்மாவட்டத்தில் மழை வானிலை தொடருமாயின் மேற்படி கங்கைகள் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 100 மீற்றர் மழைவீழ்ச்சிப் பதியக்கூடும் என்று, வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
எனவே, பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago