2025 ஜூலை 12, சனிக்கிழமை

இரவு தபால் ரயில்கள் இரண்டும் தூங்கின

Editorial   / 2023 நவம்பர் 22 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலையக புகையிரத தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், இன்று (22) இரவு தபால் ரயில்கள் இரண்டும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு வரையான இரண்டு இரவு நேர தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என  ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் இன்று (22) அறிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழையுடன் மலையக ரயில் தண்டவாளங்களில் பல இடங்களில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மலையகப் பாதையில் நாள் முழுவதும் ரயில்கள் தாமதமாகவும், மட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகவும் இருந்ததாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா ரயில் நிலையங்களுக்கு இடையில் இலக்கம் 31 ஐக் கொண்ட பிங்கேயாவிற்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் இன்று காலை 5 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் ரயில் சேவை தடைப்பட்டது.

மேலும், ஹலி கால்வாய்க்கும் தெமோதரக்கும் இடையில் புகையிரத தண்டவாளத்திலும்  அம்பேவெல மற்றும் பட்டிபொலவிற்கும் இடையிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .