Kogilavani / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை நகரில் தேசிய சத்துணவு விற்பனை நிலையம், வைபவ ரீதியாக இன்று (20) காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வனங்கள் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்நாயக்காவின் பணிப்புக்கு அமைய அமைச்சரின் செயலாளர் எஸ்.பி.ரத்நாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இந்நிலையத்தை திறந்து வைத்தார்.
சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவில் இராகலை பிரதேச விவசாய மற்றும் கமத்தொழில் திணைகளத்தால், மேற்படி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட உதவிச் செயலாளர்களான விஜித்தா மாயாதுன்ன, சரத்சந்ர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago