2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

இராகலைக்கு கிடைத்த சீனி நுவரெலியாவுக்கு கிடைக்கவில்லை

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா மற்றும் இராகலை நகரில் இயங்கும் சதொச மொத்த விற்பனை நிலையங்களில், சீனியை மாத்திரம் கொள்வனவு செய்வதற்காக,  குறித்த நகரங்களை அண்மித்த தோட்டங்களைச் சேர்ந்த  அதிகளவானோர்,  இன்று (02) காலை நகரங்களுக்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போது இராகலை சதொச மொத்த விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ கிராம் சீனி 130 ரூபாய்க்கு, நுகர்வோருக்கு வழங்கப்பட்டது.

எனினும்  நுவரெலியா- லோசன் வீதியில் அமைந்துள்ள சதொச மொத்த விற்பனை நிலையத்தில்,  நேற்றும் (1) இன்றும்  சீனிக்கு தட்டுபாடு நிலவியதால், சீனி வாங்குவதற்குச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இது தொடர்பில் நுவரெலியா சதொச மொத்த விற்பனை நிலைய முகாமையாளரிடம் வினவியபோது, தற்போது  சீனி தமது விற்பனை நிலையத்தில் இல்லை என தெரிவித்த அவர், நாளை (3) போதியளவு சீனி தமது சதொச நிலையத்துக்குக் கிடைக்கும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X