R.Maheshwary / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னக்கோனின் மனைவியுடைய வீடொன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருள்களைத் திருடிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி- வேவல்பிட்டிய பகுதியிலுள்ள குறித்த வீடு, இரவில் உடைக்கப்பட்டு அங்கிருந்த மின்சார உபகரணங்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்பன திருடப்பட்டமை தொடர்பில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, கண்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதற்கமைய, அங்கிருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா காணொளிகளை அடிப்படையாக வைத்து, மஹியாவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
50 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
9 hours ago