Kogilavani / 2017 ஜூன் 27 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, வாரியபொல ஆகிய பகுதிகளில், இன்றுக் காலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில், 53,37 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரிக்கு பயணித்த லொறியொன்று, இரத்தினபுரி- பெல்மடுல்ல வீதி, பதுல்பான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது மோதியதில், முச்சக்கர வண்டியின் சாரதியான, இரத்தினபுரி, லேலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த லால்குமார என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த நபரை, வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வாரியபொல பொலிஸ் பிரிவு, குருநாகல் - புத்தளம் வீதி, ஹீரிகொல்ல வாவிக்கு அருகில், முச்சக்கர வண்டியொன்று ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியின் சாரதியான கதன்தேவெவ, வாரியபொலயைச் சேர்ந்த ஹிமியாமி முதியன்சலாகே (வயது 53) என்பவர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago