Freelancer / 2023 மார்ச் 22 , மு.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
அமெரிக்கா நாட்டின் விவசாயத் திணைக்களத்தின் பாலம் திட்டத்தின் மூலம் (SDA FOOD FOR EDUCATION PALAM PROJECT), இலங்கையில் உள்ள 95,000 பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விசேட திட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
இதற்கமைய, அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் பாலம் திட்டத்தின் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தில் குருஆகார வித்தியாலயம் மற்றும் சங்கபால ஸ்ரீ குணரத்தன வித்தியாலயம் என்பவற்றுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி ஷன்ங், நேற்று முன்தினம் (20) ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில், கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பாலம் திட்டத்துக்காக 27.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி திட்டம், இலங்கையில் இரத்தினபுரி, நுவரெவியா, பதுலை, மொனராகல, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 852 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago