Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட மூன்று பேர் இரு வேறிடங்களில் இடங்களில் இலஞ்ச ஊழல் மோசடி பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை பிரதேசத்தில் மணல் கொண்டு செல்லும் ஒருவரிடம் 8,500 ரூபாய் இலஞ்சம் கேட்டு அதில் 5,000 ரூபாவை பெற்றும் பின்னர் மிகுதி 3,500 ரூபாவை பெற்றுக்கொள்ளும்போது உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் சார்ஜன்ட் ஒருவரையும் ஆணைக்குழுவினர் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்; ஒன்றுக்கான பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகளை பெற்றுக்;கொடுப்பதற்காக 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ஒருவரையும் ஆணைக்குழு கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago