Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஷ், செ.தி.பெருமாள்
ஹொரண பிளான்டேஷனுக்கு உட்பட்ட ஓல்டன், ஸ்டொக்கம், மஹாநிலு, பெயார்லோன் போன்ற தோட்டங்களுக்கு, தேயிலை நிறுவைக்காக, புதிய இலத்திரனியல் தராசு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால், தொழிலாளர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தராசு தொடர்பிலான முழுமையான தெளிவின்மையால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் தலைமையில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அ.நந்தகுமார், தொ.தே.சங்கத்தின் மாநில இயக்குநர்களான வீராசாமி, கனகராஜ், ஜெயபாலன், அமைப்பாளர் பியோனிஸ் ஆகியோர் நேரடியாகக் களத்துக்குச் சென்று தொழிலாளர்களிடம் கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இவ்விடயம் தொடர்பாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர் கூறுகையில், “நவீன உலகுக்கு ஏற்ப நாமும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றும் ஆனால் அம்மாற்றங்களால் இதுவரை காணப்பட்ட சலுகைகள், வழங்கப்பட வேண்டிய வேதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், நவீன இலத்திரனியல் தராசு பற்றி, தொழிளர்களுக்கு தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .