2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இலவச பற்சிகிச்சை நடமாடும் சேவை இன்று ஆரம்பம்

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையிலுள்ள அனைத்து தோட்டப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இலவச பற்சிகிச்சை நடமாடும் முகாம் இன்றைய தினம் (31)ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவை, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமாரின் ஏற்பாட்டில், சுகாதார அமைச்சர் மற்றும் மாகாண சுகாதார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெறுகிறது. 

இதன்படி, கோணகலை தோட்ட வைத்தியசாலையில் இன்றைய தினமும்(31), நாளை (01) மடுல்சீமை இந்து கலாசார மண்டபத்திலும், நாளை மறுதினம் (02) லுணுகலை, அடாவத்த தோட்ட வைத்தியசாலையில் பற்சிகிச்சைகள் இடம்பெறவுள்ளது.

பதுளை மாவட்டத்திலுள்ள ஏனைய தோட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 23 நிலையங்களில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .