Editorial / 2024 ஜனவரி 16 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலையிலுள்ள மரமொன்றில் இருந்து இளநீர் பறிக்கச் சென்ற போது அருகில் இருந்த உயரழுத்த மின்கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தோட்டை புஸ்ஸெல்ல மகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அகலங்க் இந்துவர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளநீர் கொப்பை கட்டி இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட கயிறு அருகில் இருந்த கூரையின் மீது விழுந்துள்ளது. அதனை கொக்கியை பயன்படுத்தி எடுக்க முயன்ற போதே மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்தான்.
குறித்த மாணவர் இரத்தோட்ட, கலுகல் சமவெளி கிராமப் பகுதியில் வசிப்பவராவார் என்று தெரிவித்த இரத்தோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
11 minute ago
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
38 minute ago