Sudharshini / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.எம். ரம்ஸீன்
உடுநுவர பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்கள் அதிகளவில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காமினி தென்னகோன் நேற்று (22) தெரிவித்தார்.
'கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் உடுநுவர பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளிலும்; சட்டவிரோத கட்டடங்கள் அதிகரித்துள்ளன.
இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதிகாரிகள் காணப்படுவது கவலைக்குரியதாகும. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டடங்களால் எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வருபவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
உடுநுவரையில் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடுகள் இன்றி எல்லா இடங்களிலும் இத்தகைய நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .