2025 மே 12, திங்கட்கிழமை

உடதெல்தோட்டையில் ஒருவருக்கு கொரோனா

Kogilavani   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீ   

கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடதெல்தோட்டை பகுதியில், யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அப்பகுதியில், ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி யுவதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பெற்றக்கொண்ட நூலொன்றை மீள கையளிப்பதற்காக, இம்மாதம் 5 ஆம் திகதி தனது நண்பருடன் கொழும்புக்குச் சென்றுள்ளார்.

தடிமன் காரணமாக அவர், 9 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுள்ளார் என்றும் தடிமன் குறையாததால் 13 ஆம் திகதி கலஹா பிரதேச வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார் என்றும்  அங்கு அவருக்கு வழங்கப்பட்ட மருந்தாலும் நோய் குணமடையாததால் 20 ஆம் திகதி பேராதனை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார் என்றும் தெரியவருகிறது. 

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு கொரோன தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  

இதனையடுத்து மேற்படி யுவதி, நேற்று (23) இரவு தெல்தெனிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் அவரது  உறவினர்கள் உள்ளடங்களாக ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அப்பகுதிக்கான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X