Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 26 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
மொனராகலை பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அதிகாலை இரண்டு மணியில் இருந்து வரிசையில் நிற்கும் அவர்களுக்கு மாலை வரை உரிய உதவித் தொகை கிடைக்காமல் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.
நாளொன்றுக்கு 200 பேருக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்கப்படுவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னர் அந்தந்த பகுதி தபால் அலுவலகங்கள் ஊடாக குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தன.
எனினும் அண்மைக்காலமாக சமுர்த்தி வங்கியினால் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதால் தூரப் பகுதிகளிலுள்ள முதியவர்கள் கூட இந்த கொடுப்பனவைப் பெற, மொனராகலை நகரத்தில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ரூபாய் எடுப்பதற்கு இரண்டு முறை வந்தால் நானூறு ரூபாய் செலவாவதால், தமது முதியோர் உதவித்தொகை கிராம தபால் நிலையங்களில் வழங்க நடவடிககை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்து சமுர்த்தி உதவி ஆணையாளர் டி.எல்.சோமரத்ன, ஒரே நாளில் ஏராளமானோர் வருவதால் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது என தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கிராம அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
16 minute ago
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
44 minute ago