R.Maheshwary / 2022 மார்ச் 14 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ- சென் மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
நேற்று (13) மாலை 04.30 மணியளவில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, கிரிக்கெட் சுற்று போட்டியைப் பார்க்கச் சென்ற பாரதிதர்ஷன் என்ற மாணவன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர் தேடிய போதே, மரக்கறி தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற ஆறரை அடி ஆழமான கிணறு ஒன்றில் மாணவன் சடலமாக கிடந்துள்ளதை கண்டுள்ளனர்.
அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உதட்டுப்பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொகவந்தலாவை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026