2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

‘உயிருக்கு போராடும் எருமையை காப்பாற்றுங்கள்’

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-பி.கேதீஸ்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொட -  மடக்கும்புர - புதுகாடு பகுதியில், தேயிலை மலைக்குள் எருமை மாடொன்று, கடந்த சில நாட்களாக சிக்குண்டு உயிருக்கு போராடி வருவதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இப்பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மிருகங்களை பிடிப்பதற்கு இடப்பட்ட வளையில் குறித்த எருமை மாடு சிக்குண்டு பரிதவித்து வருகின்றது.

இந்நிலையில், பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்களால் காப்பாற்ற பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் எதுவும் பயனளிக்கவில்லை என பிரதேசமக்கள் தெரிவித்துள்ளனர்.   

இது தொடர்பாக, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகமவிடம் வினவியபோது,

இது தொடர்பாக இதுவரை  எவரும் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் தற்போதுதான் இப்பிரச்சினை எங்களுக்கு தெரியவந்துள்ளது எனவும் எனக்கு தெரிய வந்த அடுத்த நிமிடமே அந்த எருமை மாட்டின் உயிரை காக்க வன விலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன் எனவும் அவர்கள் விரைந்து செயற்பட்டு எருமை மாட்டை உயிருடன் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .