2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஊ.சே.நி இலக்கம் புதுப்பிப்புக்கு எதிர்ப்பு

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ்  

ஊழியர் சேமலாப நிதியின் (ஊ.சே.நி) இலக்கத்தைப் புதுப்பித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட்டவலை பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கி வந்த மீனாட்சி, லொனக், கிளாரடனமன்ட் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று (23)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேற்படி தோட்டங்கள், தற்போது வேறு ஒரு தனியார் தோட்ட நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி இலக்கங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.  

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

பழைய ஊழியர் சேமலாப நிதி இலக்கத்துடனேயே, தாம் தொடர்ந்து பணிபுரிய விரும்புவதாகவும் புதிய இலக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தொழிலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.  

இதேவேளை, அத்தோட்டத்திலுள்ள பாற் பண்ணை நிறுவனத்தில், அதே தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் தொழிலாளர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X