Kogilavani / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீனின் ஆலோசனைக்கு அமைவாக, பிதேசசபை ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய சேவைகள் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வு, அக்குறணை பெரிய பள்ளிவாயல் வளாகத்தில், சனிக்கிழமை (20) இடம்பெறவுள்ளது.
'ஊருக்கு ஒரு பிரதேச' சபை என்ற தலைப்பின் கீழ் நடைபெறவுள்ள இந் நிகழ்வில், பிரதேச சபையின் சேவைகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
பிரதேச சபையால் வழங்கப்படும் சேவைகள் பற்றி மக்கள் தெளிவற்றுள்ளனர் என்று தெரிவித்த தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன், பிரதேச சபைக்கு இருக்கும் சட்ட அதிகாரங்கள் பற்றியும் தெளிவுபடுத்தும் நோக்குடன், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரை, அக்குறணை புளுகொஹொதென்ன பெரிய பள்ளிவாயல் வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெறும் என்றும் துறை சார்ந்தவர்கள இது தொடர்பாக விளக்கமளிக்க உள்ளனர் என்றும், அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் மேலும் தெரிவித்தார்.
5 minute ago
16 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
46 minute ago