2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஊழல் மோசடியில் ஈடுபட்ட பதிவாளர் பணி நீக்கம்

Sudharshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை பிரதேசத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பதிவாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தினால்; இலவசமாக வழங்கப்படும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை, மக்களிடம் பணத்தை பெற்று வழங்கிய குற்றச்சாட்டையடுத்தே மேற்படி பதிவாளர் பணி நீக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பதிவாளர் பிறப்பு- இறப்பு பத்திரத்தை பெற்றுகொடுப்பதற்காக நபர் ஒருவரிடமிருந்து 500 ரூபாய் வரை பெற்றுகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவையின் நிமித்தம் மேற்படி பதிவாளரிடம் செல்லும் மஹியங்கனை பிரதேச மக்கள்  பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

மக்களிடம் பணத்தை பெற்று காரியம் ஆற்றும் இப்பதிவாளரின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள், கடிதங்கள் மூலம் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியபோதிலும் அம்முயற்சி பயனளிக்கவில்லை.

இந்நிலையில் இப்பதிவாளரின் சட்டவிரோத செயற்பாடுகள் ஊடகங்கள் வாயிலாக கடந்த 20ஆம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

மஹியங்கனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 350 பிறப்புக்களும் 40 இறப்புகளும் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதற்கூடாக இப்பதிவாளர் ஒருலட்சத்து 95,000 ரூபாவை மாதாந்த வருமானமாக பெற்றுகொண்டுள்ளாரென தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .