Sudharshini / 2016 ஜூலை 05 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாண கல்வி அபிவிருத்திக்காக உலக வங்கியிடமிருந்து 90 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, நேற்று (5) கூறினார்.
இந்நிதியினூடாக பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, 'மாகாணத்திலுள்ள 890 பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி, பாடசாலைகளின் நூலகங்களுக்கு அறிவுசார் நூல்களை பெற்றுக்கொடுத்தல், பாடசாலைகளை புனரமைத்தல், பாடசாலைகளுக்கு பௌதிக வளங்களைப் பெற்றுக்கொடுத்தல், பாடசாலைகளுக்கான புதிய கட்டடங்களைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
250 இற்கும் குறைவான மாணவரை கொண்ட பாடசாலைகளுக்கு 95 ஆயிரம் ரூபாயும் 251-500 மாணவரை கொண்ட பாடசாலைகளுக்கு ஒரு இலட்சத்து 40,000 ரூபாயும், 501-750 மாணவரை கொண்ட பாடசாலைகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், 751-1,000 மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாயும், 1001க்கு மேல் மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலையின் தேவைகளை இனங்கண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வேலைத்திட்டங்கள், அனைத்தும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவுபெறல் வேண்டுமெனவும், வேலைத் திட்டங்களுக்கான காசோலைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago