R.Maheshwary / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
எட்டியாந்தோட்டை- மலல்பொல கிராம உத்தியோகத்தர் பிரிவின் அமுஹேன பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் பழுதடைந்துள்ளதாகவும் எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த ருவன்வெல்ல பதில் நீதவான் நிமல் புஸ்பகுமார, மரண விசாரணையை நடத்தியதுடன், நேற்றைய தினமே சடலம் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இச்சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago