2026 ஜனவரி 21, புதன்கிழமை

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்தர விராஜ் அபயசிறி

மாத்தளை  ரத்வத்தை தோட்டம், தொம்பகொட பிரதேசத்தில், உடற்பாகங்கள் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலத்தை, ரத்தொட்டை பொலிஸார் நேற்று (21) மீட்டுள்ளனர்.

பெண்ணின் சடலமொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்  சடலத்தை மீட்டுள்ளனர்.

மண்டையோடும் ஒரு கால் மட்டுமே எரிந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் வேறு ஓர் இடத்தில் கொலைசெய்யப்பட்டு மேற்படிப் பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 பெண்ணின் விவரங்கள் கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X