2025 மே 19, திங்கட்கிழமை

எல்ல ஒடிசி ரயில் வியாழக்கிழமைகளிலும் ஒடும்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

இதுவரை வார இறுதி நாட்களில் பயணித்த எல்ல ஒடிசி விசேட அதிவேக ரயிலானது, ஒவ்வொரு வியாழன் கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் சேவையானது, இன்று (8) தொடக்கம் ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் காலை 5.30 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் எல்ல ஒடிசி சிறப்பு விரைவு ரயில் அன்றைய தினம் பிற்பகல் 3.45 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.

கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் எல்ல ஒடிஸி ரயிலில் 08 பெட்டிகள் உள்ளன.

சில ரயில் நிலையங்களில் மட்டும் நிறுத்திச் செல்லும் இந்த ரயில், சுற்றுலா பகுதிகளற்ற  சில  ரயில் நிலையங்களில் சில நிமிடங்கள் நிறுத்தப்படுவதுடன், ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் ரயிலில் இருந்தே அந்த சுற்றுலா தலங்களை பார்வையிட்டு புகைப்படம் எடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இன்று (08)  பயணித்த  எல்ல ஒடிஸி ரயிலில் அதிகமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X