2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஐந்து வாகனங்களுக்கு சேதம் விளைவித்த இராணுவ வீரர் கைது

Kogilavani   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி ஐந்து வாகனங்களுக்கு சேதம் விளைவித்த இராணுவ வீரர் ஒருவரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

மேற்படி இராணுவ வீரர் கட்டுகஸ்தோட்டை பிரதான வீதி. நித்தவெல பகுயில், இராணுவத்துக்குச் சொந்தமான வாகனமொன்றை செலுத்திச் சென்று ஐந்து வாகனங்களின் மீது மோதியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர், கட்டுஸ்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இராணுவவீரரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X