Kogilavani / 2021 மே 06 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அரசாங்கத்தை குறைகூறுவதைவிட சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ள இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சுப்பையா சதாசிவம், பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றின் போது அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதுடன் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி பிரதமர் உட்பட்ட அரசாங்கம் முறையான, திட்டமிட்ட அடிப்படையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பல சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்புப் பிரிவினரும் சுகாதார பிரிவினரும் நடைமுறைபடுத்தி வருகின்றனர் என்று தெரிவித்த அவர், அரசாங்கம எந்தளவுக்கு திட்டமிட்டாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் எந்த ஒரு விடயமும் சாத்தியமாகாது என்றும் தெரிவித்தார்.
13 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago