Sudharshini / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சங்கீதன்
ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அந்த சமூகத்திற்கு கிடைக்கும் கல்வியின் மூலமே ஏற்படுத்தப்படவேண்டும். அந்த அடிப்படையில் இந்த அமைச்சு மீண்டும் எனக்கு கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இதன் மூலம் எமது சமூகத்துக்கு அதி கூடிய பயன்களை பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்வேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று திங்கட்கிழமை (14) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'100 நாட்கள் வேலைத்திட்டத்தை நான் சரியான முறையில் முன்னெடுத்தமையினாலே, ஜனாதிபதியும் பிரதமரும் மீண்டும் என்னை கல்வி இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளனர். பிரதமர் பல எதிர்பார்ப்புகளுடன் இந்த அமைச்சை எனக்கு வழங்கியுள்ளார். புதிய பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருகின்றோம். மலையக பகுதிகளில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள 10 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்த நான் எதிர்பார்க்கின்றேன்.
தேசிய பாடசாலைகள் அதிகமாக இருந்தால் எமது மாணவர்களின் கல்வி நிலையும் உயரும். அதேவேளை, பாடசாலைகள் தரமுயர்;த்தப்பட்டால் நேரடியாக எமது அமைச்சு தலையிட்டு அந்த பாடசாலைகளுக்கு தேவையான அபிவிருத்திகளைச் செய்ய முடியும். பின்பு படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த முடியும்.
இந்த நாட்டின் எதிர்கால தலைவர்களை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. எனவே, நாம் அதனை சரியாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே எமது நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக இருக்கும். நாம் இன்று செய்கின்ற அனைத்து வேலைத்திட்டங்களும் எதிர்காலத்தை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் என்பதே எனது எண்ணம்' என அவர் குறிப்பிட்டார்.
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago