Sudharshini / 2016 மார்ச் 01 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சங்கீதன், கு.புஸ்பராஜ்
'கடந்த காலங்களில் மலையகத் தலைவர்களிடத்தில் ஒற்றுமை காணப்படாமையால் அபிவிருத்திகள் பின்னடைந்தன. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. நாங்கள் முற்போக்கு கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சில கோமாளிகளே, பிரதேசவாதம் பேசுகின்றனர்;. இவ்வாறானவர்களை என்றுமே திருத்த முடியாது' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
'கோமாளிகளின் கதைகளைக் கேட்டு, மலையகத்தின் கல்வி அபிவிருத்தியை நிறுத்த முடியாது. யார் என்ன கூறினாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களில்மலையகத்தின் கல்வியை அபிவிருத்தி செய்தே தீருவேன். எந்த தடைகள் வந்தாலும் அதனை தகர்த்தெறிய நான் தயாராக இருக்கின்றேன்' என்றும் அவர் கூறினார்.
அக்கரப்பத்தனை, டயகம கிழக்கில், மத்திய அரசாங்கத்தின் ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு பாலங்களை, ஞாயிற்றுக்கிழமை (28) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்;ந்து உரையாற்றிய அவர், 'கடந்த பத்து வருடங்களாக மலையக கல்வி அபிவிருத்திக்காக திட்டமிடப்பட்ட அடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே இன்று நாம் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளோம்' என்றார்.
'எனவே, நாம் திட்டமிட்ட முறையில் செயற்படாவிட்டால் எதிர்வரும் பத்து வருடங்களின் பின்னரும்; நாம் இதே பிரச்சினையை எதிர்நோக்க வேண்டிவரும்' என எச்சரிக்கை விடுத்தார்.
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago